
கொக்குவில் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகன் ஆலய சண்டேஸ்வரர் தேர் வெள்ளோட்ட விஞ்ஞாபனம் 2026
கொக்குவில் அருள்மிகு மஞ்சவனப்பதி முருகன் ஆலயம் சண்டேஸ்வரர் தேர் வெள்ளோட்ட விஞ்ஞாபனம்
முருகன் அடியார்களே!
இந்து சமுத்திரத்தின் முத்தாக மிளிரும் “சிவபூமி” என திருமூலரால் போற்றப்பட்ட ஈழத்திருநாட்டின் வடபால் சைவமும் அறமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தில் பல முருகன் ஆலயங்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் கொக்குவில் பதியிலே “மஞ்சவனப்பதி” என்னும் திவ்விய நாமத்துடன் விளங்கும் எமது ஆலயத்தின் சண்டேஸ்வரருக்கான தேர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 26.08.2026 அன்று பகல் 12.00 மணியளவில் வெள்ளோட்டம் காண இருக்கின்றது. இந்த வெள்ளோட்ட நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தேர் நிர்மாணம்
ஐயாத்துரை விக்கினேஸ்வரன் (இணுவில்)
விக்கினேஸ்வரன் துஷாந்தன் (இணுவில்)
துரைராசா சபில்ராஜ் (திருநெல்வேலி)
(துஷாந்தன் சிற்பாலயம்)
வர்ண வேலை
செல்லையா செல்வதாஸ்
(காமாட்சி அம்பாள் ஓவியக் கலையகம் திருநெல்வேலி)
தேர் உபயம்:
திருமதி க.சண்முகரட்ணம் குடும்பம் (கனடா)
இறை பணியில்
தர்மகர்த்தா சபை,
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்.