📍 யாழ்ப்பாணம், இலங்கைகொக்குவில் – எங்கள் ஊர், எங்கள் உறவு
தமிழ் English
KOKUVIL logo

KOKUVIL

எங்கள் கிராமம் • எங்கள் பாரம்பரியம் • எங்கள் சமூகம் Our Village • Our Heritage • Our Community
+ புதிய தகவல் சேர்க்க
← நினைவஞ்சலி
🕊️ அன்புடன் நினைவுகூர்கிறோம்

சபாரத்தினம் சிவனேசன்

02 January 194720 August 2026
இணுவிலைப் பிறப்பிடமாகவும் கலாபவனம் ஆடியபாதம் வீதி கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவனேசன் அவர்கள் நேற்று (20-08-2026) வியாழக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் - ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏரம்பு சுப்பையா - பூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும், சாந்தினி (அதிபர் கலாபவனம், ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை கோப்பாய்) அவர்களின் அன்புக் கணவரும், பேராசிரியர் சபா ஆனந் (விளையாட்டு விஞ்ஞான அலகு, யாழ் பல்கலைக்கழகம்), தேவந்தி (விரிவுரையாளர் சேர். பொன். இராமநாதன் காண்மியல் ஆற்றுகைக் கலைகள் பீடம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகந்தினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் கோட்டக் கல்வி அலுவலகம் வேலணை), திருநந்தன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், வர்ஷானந், ஸ்ரீயந்தி, யஷ்வந்தி, தியாவந்தி ஆகியோரின் அன்பு பேரனும், ஞானபூரணம், சாரதாதேவி, பேராசிரியர் சபாஜெயராசா, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பூமணி, திரவியம், சண்முகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சௌதாமினி, கிருபானந்தன் (ஜெர்மனி) உமாசங்கர் (கனடா), குமுதினா (கனடா), கோபிசங்கர் (கனடா) காலஞ்சென்றவர்களான உதயசங்கர், கிருந்திகாயினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (21.08-2026) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்