கொக்குவில் (Kokuvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். யாழ்ப்பாணம்-காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 2 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் கோண்டாவிலும் உள்ளன. கிழக்குத் திசையில் திருநெல்வேலி அமைந்துள்ளது. காங்கேசன்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.
திருநெல்வேலிச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி வரும் வீதி, காங்கேசந்துறை வீதியைச் சந்திக்கும் இடமான கொக்குவில் சந்தி இவ்வூரின் மைய இடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றான கொக்குவில் இந்துக் கல்லூரி இச் சந்திக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது.[1]
கொக்குவில்